சிறிசேனா வருகையால் ஈழத் தமிழர் பிரச்சனை தீர புதிய வழி ஏற்படும்: பொன். ராதாகிருஷ்ணன்
கோவை: இலங்கை அதிபரின் வருகையால் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய வழி ஏற்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகிறார். அவர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு நடந்த பிறகு இந்தியா-இலங்கை இடையேயான உறவில் திருப்பம் ஏற்படும்.
சிறிசேனாவின் வருகை மூலம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய வழி ஏற்படும். மேலும் தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கவும் வழி பிறக்கும். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்கள் கிடைக்க பாஜக உதவும் என்றார்.
சிறிசேனாவின் வரவால் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று தான் நம்புவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications