சிவகங்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: சப் இன்ஸ்பெக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 50. இவருடைய மகன் கார்த்திக், 23. முத்துப்பாண்டியின் 17 வயது மகளை தந்தை, மகன் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் அத்தை சுசீலா என்பவர் கடந்த ஜூன் 6ம் தேதி சிவகங்கை மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

Sivaganga sub-inspector held for minor’s rape after PIL names him

இதனைத்தொடர்ந்து முத்துப்பாண்டி, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட எஸ்.பி துரை உத்தரவின் பேரில் மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சிவகங்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் மாஜிஸ்திரேட்டிடம் தன்னிடம் தவறாக நடந்தவர்கள் குறித்து ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், சிவகங்கை ஸ்டேஷன் எஸ்.ஐ., சங்கர்,55, இளையான்குடி தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார்,32, செந்தில்குமார்,36, அரவிந்த்,21 மற்றும் மதுரையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் உட்பட 25 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளார்.

குடும்பத்தினர் ஆதரவு இல்லாததால், மாணவியை சென்னை புரசைவாக்கம் தனியார் சிறுவர் இல்லத்தில் சேர்த்து உள்ளனர். இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த 3 மாதமாக மந்தநிலையில் இருந்தது இதையடுத்து, வழக்கறிஞர் வின்சென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் மீது நவம்பர் 3ம் தேதிக்குள் டி.ஜி.பி., அரசு செயலர், சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, சிவகங்கை எஸ்.பி., எம்.துரை உத்தரவின்படி, சிவகங்கை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, மகளிர் போலீசார் உள்ளிட்டோர் விசாரணையை துவக்கினர்.

மதுரை உயர் போலீஸ் அதிகாரி அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர், சிவகங்கை எஸ்.ஐ., சங்கர் உட்பட சிலரிடம் விசாரித்தனர்.எஸ்.ஐ., உட்பட 4 பேர் கைது: விசாரணைக்கு பின் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவகங்கை எஸ்.ஐ.,சங்கர்,55, இளையான்குடி தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், 32, மதுரை தனியார் பர்னிச்சர் கடை ஊழியர் அரவிந்த்,21, சிவகங்கை செந்தில்குமார், 36, ஆகிய 4 பேரையும் நேற்று இரவு போலீசார் கைது செய்து, சிவகங்கை மாஜிஸ்திரேட் எண் 1ல் ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் தீபா உத்தரவிட்டார்.

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான எஸ்.ஐ.,சங்கர் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றுள்ளார். சிவகங்கை எஸ்.பி.,இவரை ஏற்கனவே தேவகோட்டைக்கு டிரான்ஸ்பர் செய்திருந்தார் எனினும், எஸ்.பி., தனிப்பிரிவு அதிகாரிகளின் சிபாரிசின் பேரில் மீண்டும் சிவகங்கைக்கு வந்துள்ளார்.

காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் இந்த எஸ்.ஐ.,க்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதனாலேயே மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் எஸ்.ஐ.,சங்கர் ஈடுபடுவது குறித்து, எஸ்.பி.,யின் கவனத்திற்கு செல்லாமல் மறைத்து உள்ளனர், என போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+