சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் : 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
சிவாஜி கணேசன் பிறந்தநாள் தமிழக அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் தமிழக அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், இன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மழை வெள்ளம் ஏற்படாமல் ரூபாய் 100 கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும்.
மேலும், அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியம் ரூபாய் 4 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். நடிகர் சிவாஜி கணேசன், ராமசாமி படையாட்சி ஆகியோரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ்
— DIPR TN (@TNGOVDIPR) June 29, 2018
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின்
அறிக்கை – 29.6.2018 pic.twitter.com/KMRQgtrWQ1












Click it and Unblock the Notifications