திருச்சி ஜெயஸ்ரீ முரளிதரன் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி டிரான்ஸ்பர்!!
சென்னை: திருச்சி மாவட்ட ஆட்சியரான ஜெயஸ்ரீ முரளிதரன் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஆர்.கிர்லோஷ் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தற்போது திடீரென அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு முக்கியத்துவம் இல்லாத கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இதேபோல தேனி மாவட்ட ஆட்சியராக இருக்கும் கே.எஸ்.பழனிச்சாமி திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் ஆட்சியர் என்.வெங்கடாசலம், தேனி மாவட்ட ஆட்சியராகவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிகரன் திண்டுக்கல் ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வி.ராஜாராம் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டி.முனுசாமி சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருக்கும் ஆர்.கிர்லோஷ்குமார் நகரமைப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications