சதம் அடித்த சின்ன வெங்காயம் விலை.. உரிக்காமலே கண்ணீர் விடும் தாய்க்குலங்கள்
சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100...தாய்மார்களே தீபாவளி வரை விலை குறைய வாய்ப்பே இல்லையாம்!
சென்னை: சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு விற்கப்படுவதால் தீபாவளி பண்டிகை வரை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
சாம்பார் கமகமக்க காரணமாக இருப்பது சாம்பார் வெங்காயமாகும். இதன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.125 வரை விற்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் சின்னவெங்காயம் பயிரிடுவதும் குறைந்தது.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.40 வரை விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
கடந்த சில நாட்களாக முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. இதற்கு அடுத்த தர சின்ன வெங்காயம் ரூ.90, ரூ.80, ரூ.70 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.
அதேவேளை கர்நாடகா, ஆந்திரா, மும்பையில் இருந்து பல்லாரி வெங்காயம் வரத்து உள்ளது. இதன் காரணமாக இதன் விலை சராசரியாக கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.
கடந்த மாதம் வரை பல்லாரி கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. சின்னவெங்காயம் விலை உயர்வால் பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால், தீபாவளியை தொடர்ந்து மேலும் இருவாரங்களுக்கு இந்த விலையிலேயே விற்பனையாக வாய்ப்புள்ளது என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications