ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
இவ்வாண்டு இறுதிக்குள் ‘ஸ்மார்ட் கார்டு' குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: வரும் டிசம்பர் இறுதிக்குள் 'ஸ்மார்ட் கார்டு' குடும்ப அட்டைகளை அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வ தற்கான மிகச்சிறந்த அளவீடு, பொதுவினியோகத் திட்டத்திற்கான குடும்ப அட்டை வழங்கப்படும் முறை தான்.
தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் முடிந்து ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இதுவரை புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. எப்போது அவை வழங்கப்படும் என்றும் யாருக்கும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டிலுள்ள குடும்ப அட்டைகள் 2005ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டவை. அவற்றின் செல்லத்தக்க காலம் 2009ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விட்ட நிலையில், 2010ஆம் ஆண்டில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
ஆனால், போலி குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், அவற்றைக் கணக்கெடுத்து நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2011ஆம் ஆண்டு ஜூன் வரை ஒன்றரை ஆண்டுக்கு அப்போதைய தி.மு.க. அரசு நீட்டித்தது.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு ஐந்தாண்டு பதவிக்காலத்தில் குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2014-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டாக குடும்ப அட்டைகளின் காலத்தை நீட்டித்து வந்த அதிமுக அரசு, அதன்பின் ஸ்மார்ட் அட்டை வழங்குவதாகக் கூறி காலம் கடத்தி வருகிறது.
ஆனால், இதுவரை ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் 03.09.2015 அன்று உறுப் பினர்களின் வினாக்களுக்கு பதிலளித்து பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ''ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.
முதல்கட்டமாக சென்னை, திருச்சியில் 39 நியாயவிலைக்கடைகளில் ஸ்மார்ட் அட்டை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார்'' என்று கூறினார். அதன்பின் 15 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அண்டை மாநிலமான ஆந்திராவிலும், கேரளத்திலும் ஸ்மார்ட் அட்டைகள் சில ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் இத்திட்டத்திற்காக ரூ.318 கோடி ஒதுக்கப்பட்ட பிறகும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படாதது மாநில அரசு நிர்வாகத்தின் இயலாமையையே காட்டுகிறது. குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் முடிவடைந்து 7 ஆண்டுகள் ஆகியும் புதிய அட்டை கிடைக்காமல் கந்தலான அட்டையை கொண்டு செல்லும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.

ஆதார் விவரங்கள் கிடைக்கவில்லை, ஸ்மார்ட் அட்டைக்கான சிப் கிடைக்க வில்லை என்றெல்லாம் சொத்தைக் காரணங்களை கூறிக் கொண்டிருக்காமல், மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய ஸ்மார்ட் அட்டைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து வழங்க வேண்டும்.
மேலும் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய் உள் ளிட்ட அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு,மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications