தைவானில் இருந்து வந்த விமானத்தில் ‘பாம்பு’ பார்சல்..சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !
சென்னை: தைவானில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு அஞ்சல் பார்சலை விமான நிலையத்தில், அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் இருந்ததால் ஆடிப்போன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தைவான் நாட்டில் இருந்து கடந்த ஞாயிறுக்கிழமை நள்ளிரவு சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. திங்கட்கிழமை காலை முதல் விமானத்தில் வந்த விரைவு அஞ்சல் பார்சல்களை அஞ்சலக பார்சல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். நேற்று காலையும் ஆய்வுப்பணி தொடர்ந்தது.

அப்போது, சென்னை கேகேநகர் 68வது தெரு முகவரியிட்ட ஒரு பார்சலில், உபயோகித்த வீட்டு பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அஞ்சலக அதிகாரிகள் பார்சலை பிரித்தனர். அதில் காஸ் அடுப்பு, மிக்சி மற்றும் டிவிடி பிளேயர்கள் இருந்தன.
வீட்டு உபயோக பொருட்களுடன், ஒரு பையில், 1 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது. அதை பார்த்த அஞ்சல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாம்பு பார்சலை அனுப்பியவரின் முகவரி தைவான் மொழியில் இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை கேகேநகர் 68வது தெருவிற்கு சென்று விசாரணை நடத்தியபோது, அது போலி முகவரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக, விமான நிலைய சரக்ககத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுங்கத் துறையின், விமான சரக்கக உதவி கமிஷனர் சந்திரசேகர், மலைப்பாம்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications