Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EVMக்கு எதிராக ஃபுல் ஃபோர்சில் நந்தினி.. குஜராத்துக்கு “தண்டி யாத்திரை” செய்து மக்களிடம் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: 2024 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தலை நடத்த வலியுறுத்தி சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நந்தினி குடும்பத்துடன் தண்டி யாத்திரை சென்று குஜராத்தில் உள்ள பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி நடப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் அவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த போராடுமாறு வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் நந்தினி, தனது சகோதரி நிரஞ்சனா மற்றும் தனது தந்தை ஆனந்தன் ஆகியோருடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வலியுறுத்தி காந்தி வழியில் தண்டி யாத்திரை சென்று குஜராத்தில் உள்ள பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Social activist Nandhini went Dandi Yatra against EVM machines in 2024 loksabha elections

குஜராத்தை தொடர்ந்து டெல்லி - அரியானா எல்லைக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்தித்து EVM எதிர்ப்பை கையில் எடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர். அப்போது அவர்கள் EVM க்கு எதிரான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அதில், "தேசதந்தை காந்தியடிகளை கொன்ற கோட்சே கும்பல் இன்று EVM மெஷின் மூலம் ஜனநாயகத்தை கொல்கிறது. EVM-க்கு எதிரான தண்டி யாத்திரை.

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக-வின் ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் அதற்குப் பிறகு மிக மிக மோசமான எமர்ஜென்சி காலகட்டத்தை இந்திய மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். இப்போது உள்ளதை விடவும் மிக கொடூரமான ஆட்சியை இந்திய மக்கள் சந்திக்க நேரிடும். ஆகவே 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வை தோற்கடிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களின் முக்கிய கடமையாகும்.

பாஜக வை எதிர்க்கும் எதிர்கட்சிகளுக்கு இதில் மிக முக்கிய பங்குள்ளது. இன்றைய இந்தியாவின் அரசியல் சூழல் என்பது பாஜக வுக்கு பாதகமாக உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்ற எண்ணமே நாட்டு மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள் மூலம் மூன்றாவது முறையாக எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்று மோடியும் பாஜக- RSS கும்பலும் தீவிரமாக முயன்று வருகின்றனர். 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறை பிரதமர் ஆவதற்காக மோடி எதை வேண்டுமானாலும் செய்வார்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கருப்புப் பணத்தை கைப்பற்றுவது, பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பது, விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவது உட்பட பல வாக்குறுதிகளை மோடி 2014 தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்திருந்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இது நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமின்றி மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய திட்டங்கள், அரசு நிறுவனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்தது, அம்பானி- அதானியை வளர்ப்பதற்காக சிறு- குறு தொழில்களை அழித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பல கோடி மக்களுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2019 பாராளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணமே இந்திய மக்களிடம் மேலோங்கி இருந்தது. ஆனால் மக்களின் கருத்துக்கு மாறாக 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புல்வாமா படுகொலை மற்றும் EVM மோசடி ஆகியவையே மோடி 2919-ல் பிரதமராக காரணம்.

2019 தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது EVM வாக்கு எந்திரத்தில் பெரிய பிரச்சனை எழுந்தது. 2019- லோக் சபா தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 373 தொகுதிகளில் தேர்தல் நாளில் பதிவான வாக்குகளுக்கும் வாக்கு எண்ணிக்கை அன்று எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட ஆவணங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. 2019 தேர்தலில் தான் EVM முறைகேடு உச்சகட்டமாக நடந்தது. இது மிகப்பெரிய மோசடி என்பது இந்திய அரசியலை கவனித்து வரும் அனைவருக்குமே தெரியும்.

இது மட்டுமின்றி எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு செல்கிறது. EVM எந்திரம் ரோட்டில் கிடக்கிறது. சில இடங்களில் வேட்பாளருக்கு 0 ஓட்டு தான் கிடைத்துள்ளதால் தான் தனக்கு செலுத்திய வாக்கு என்ன ஆனது? போன்ற பிரச்சனைகள் ஒவ்வொரு தேர்தலிலும் எழுகின்றன. மேலும் 19 லட்சம் EVM எந்திரங்கள் காணாமல் போயுள்ளன என்ற செய்தி RTI மூலம் வெளிவந்து நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா படுகொலையில் பல்வேறு சந்தேகங்களை அப்போது ஜம்மு காஷ்மீர் சுவர்னராக இருந்த சத்யபால் மாலிக், முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய் சவுத்ரி, மற்றும் உயிரிழந்த CRPF வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எழுப்பியுள்ளனர்.

கொல்லப்பட்ட CRPF வீரர்களில் ஒருவரான பகீரத்தின் தந்தை பரசுராம், "மோடி அரசாங்கம் நாற்காலியை கைப்பற்றுவதற்காக [மீண்டும் ஆட்சியை பிடிக்க] இதைச் செய்துள்ளது என 100% நம்புகிறேன்," என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். "40 வீரர்களின் உடல்கள் மீது தான் 2019 பாராளுமன்ற தேர்தல் நடந்தது" என்று சொல்கிறார் சத்யபால் மாலிக், (புல்வாமா படுகொலையில் மோடிக்கு தொடர்புள்ளதா? என NIA ( National Investigation Agency தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க கோரி கடந்த 30.10.2023 அன்று NIA வின் Director General க்கு நாங்கள் புகார் அளித்துள்ளோம்.'

EVM மோசடி மூலம் 2019-ல் இரண்டாவது முறையாக மோடி பிரதமர் ஆன பிறகு நண்பரான அதானியை உலகின் பெரும் பணக்காரராக மாற்றுவதற்காக இந்திய மக்கள் மிக கடுமையாக சுரண்டப்படுகின்றனர். வரி மேல் வரி போட்டு இந்திய மக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள் உட்பட அரசின் சொத்துகள் முழுமையாக குஜராத் கார்பரேட்டுகளுக்கு கூறு போட்டு விற்கப்படுகின்றன. மோடி ஆட்சியில் வங்கிகளில் நடந்துள்ள வாராக்கடன் தள்ளுபடி ஊழலில் மட்டும் இந்திய மக்களின் பணம் 25 லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளால் திருடப்பட்டுள்ளது.

இவ்வளவு பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள் எப்படி மீண்டும் பாஜக வுக்கு வாக்களிப்பார்கள்? வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடந்தால் நாடு முழுவதும் பாஜக படுதோல்வி அடையும், மோடி அரசு தூக்கி எறியப்படும். உலகின் தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது உலகில் ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் 182 நாடுகள் வாக்குச்சீட்டு முறையிலேயே ஆரம்ப காலகட்டம் முதல் தற்போது வரை தேர்தலை நடத்துகின்றன. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில் வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்துகின்றனர்.

ஆனால் இந்தியாவின் தேர்தல் ஆணையமானது சந்தேகத்துக்கு இடமான, நம்பகத்தன்மையற்ற EVM முறையை மக்களின் எதிர்ப்பையும் மீறி சர்வாதிகாரமான முறையில் பயன்படுத்துகிறது. EVM-ல் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டவுடன் அயர்லாந்து, நெதர்லாந்து, பராகுவே நாடுகளில் EVM-ஐ தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சனை எழுந்தது. இதனால் இந்த 3 நாடுகளில் EVM தடை செய்யப்பட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பியுள்ளன. ஜெர்மனியில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் EVM மூலம் தேர்தல் நடத்துவது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது (UnConstitutional) என்று அறிவித்தது.

பங்களாதேஷில் எதிர்க்கட்சிகள் EVM-க்கு எதிராக தீவிரமாக போராடின. சமீபத்தில் பங்களாதேஷில் EVM தடை செய்யப்பட்டது. பங்களாதேஷ் இந்தியாவில் இருந்து EVM மெஷின்களை வாங்கி பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முக்கிய எதிர்க்கட்சியான BNP (Bangladesh Nationalist Party) ty) EVM- தேர்தல் நடந்தால் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்தது. இந்தியாவிலும் எதிர்க்கட்சிகள் பங்களாதேஷைப் போல EVM-க்கு எதிராக வலிமையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்ப்பார்ப்பு.

இந்தியாவில் சமீபத்தில் 2023 நவம்பரில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் EVM முறைகேடு செய்து வெற்றி பெற்றது பாஜக. இம்மூன்று மாநிலங்களிலும் மக்கள் "EVM மோசடி தேர்தலை ஏற்க முடியாது என்று EVM-க்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். மீண்டும் வாக்குச்சீட்டில் மறுதேர்தல் நடத்து" என கோரி வருகின்றனர். அது மட்டுமின்றி இன்று நாடு முழுவதும் மக்கள் ரோட்டில் இறங்கி EVM-க்கு எதிராக போராடி வருகின்றனர். நாட்டில் EVM-க்கு எதிராக ஒரு மக்கள் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.

தங்களுடைய உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது பிஜேபி அரசு அடக்குமுறையை ஏவிவருகிறது. மக்களின் ஓட்டு வேண்டும் என நினைப்பவர்கள் தேர்தல் நேரத்தில் இத்தகைய அடக்குமுறையை ஏவுவார்களா? "EVM-ல் முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெறலாம்,மக்களின் ஓட்டு நமக்கு தேவையில்லை" என்ற நினைப்பில் தான் விவசாயிகள் மீது இந்த கொடூரம் நிகழ்த்தப்படுகிறது. இதற்காகத் தான் நம் முன்னோர்கள் அத்தனை தியாகங்கள் செய்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்தார்களா? "EVM மூலம் எங்கள் ஓட்டு திருடப்படுகிறது.

2024 தேர்தல் EVM-ல் நடந்தால் மோடி தான் மீண்டும் வெற்றி பெறுவார். எனவே EVM தடை செய்யப்பட வேண்டும், வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். நாங்கள் தமிழ்நாட்டில் EVM க்கு எதிராக, மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். மக்களின் ஓட்டுரிமையையும்

ஜனநாயகத்தையும் காப்பாற்ற, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாட்டு மக்கள் இன்னும் வலிமையாக தங்கள் குரலை எழுப்ப வேண்டும். தேர்தல் ஆணையமும், அரசாங்கமும் மக்களின் குரலுக்கு எதிராக செயல்பட்டால் மக்கள் தங்களின் ஓட்டுரிமையை காப்பதற்காக EVM-க்கு எதிராக மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்துவார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+