இலவச திருமணம்: 68 சீர்வரிசை பொருட்கள்... கூடவே மணமக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர்
உடுமலைப்பேட்டை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு நடத்திவைக்கப்பட்ட இலவச திருமணத்தில் மணமக்களின் நெற்றியில் இலவச ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர் அதிமுகவினர்.
வெள்ள நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பு ஆளான அதிமுகவினர் இப்போது எங்கும் எதிலும் ஸ்டிக்கர் மயம் என்றாக்கிவிட்டனர்.
வெள்ளிக்கிழமையன்றி உடுமலைப் பேட்டையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒரேமேடையில் 68 திருமணங்கள் நடைபெற்றன. இந்த 68 ஜோடிகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் பொருத்தப்பட்ட பட்டை கட்டப்பட்டிருந்ததுதான் வேடிக்கை. அதை கட்டிக்கொண்டு மணமக்கள் அப்பாவியாய் அமர்ந்திருந்ததுதான் வேடிக்கை.

இலவச திருமணம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவையொட்டி உடுமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்த 68 ஜோடிகளுக்கு நேற்று உடுமலை குட்டை திடலில் இலவச திருமணம் நடைபெறுகிறது. 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து தாய் வீட்டு சீதனமாக 68 வகையான சீர்வரிசை பொருட்களை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஏற்பாடு செய்திருந்தார்.

களை கட்டிய திருமணம்
திருமணங்களை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நடத்திவைத்தார் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் எம்.பி., சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., மற்றும் சட்டசபை, நாடளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

68 சீர்வரிசை பொருட்கள்
இந்த திருமண விழாவில் மணமக்களுக்கு வழங்குவதற்காக கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரங்கள் உள்பட 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. கூடவே அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நெற்றிப்பட்டையும் மணமக்களுக்கு கட்டப்பட்டது.
|
இந்த கூத்துக்கு
அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் தூள் பறக்கிறது. இப்படி இலவச கல்யாணம் செய்யனுமா என்று கேட்டுள்ளனர்.
|
ஸ்டிக்கர் பாய்ஸ்
அடேய்... ஸ்டிக்கர் ஒட்ட உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா..தூணிலும் அம்மா,துரும்பிலும் அம்மா என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
|
வாழ்க தமிழகம்
அங்க ஒட்டி இங்க ஓட்டி கடைசியில் மணமக்கள் நெற்றியிலும் ஒட்டப்பட்ட அம்மா ஸ்டிக்கர் வாழ்க தமிழகம்
|
அட ஆர்வக்கோளாறுகளா
எல்லா இடத்தில் ஒட்டியது போல படுக்கையறையிலும் ஆர்வக்கோளாறில் ஒட்டாமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் டுவிட்டர்வாசிகள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications