சென்னையில் அதிவேகமாக வந்த ஜீப் மோதி பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் பலி
சென்னையில் ஜீப் மோதியதில் பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: மதுரவாயல் சாலை அருகே கால் டாக்சிக்காக காத்திருந்த பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் மீது ஜீப் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, போரூரைச் சேர்ந்தவர் ரஷ்மி (24). சாப்ட்வேர் என்ஜினியர். பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பரை பார்ப்பதற்காக மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்தார். நண்பரை சந்தித்த பின்னர் வீடு திரும்ப கால் டாக்சியை அழைத்துள்ளார்.

கால் டாக்சிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த ஜீப் ஒன்று அவர் மீது மோதியது. இதில் ரஷ்மீ தூக்கி வீசப்பட்டார். படுகாயத்துடன் சாலையில் விழுந்தார்.
அவர் மீது ஜீப்பை மோதிய ஆசாமி ஜீப்பை நிறுத்தாமல் சென்றுவிட்டார். படுகாயத்துடன் கிடந்த ரஷ்மியை மீட்ட அருகில் உள்ள பொதுமக்கள் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications