For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலையில் குறைப்பு.. அருண் ஜேட்லி அறிவிப்பு.. புதிய விலை என்ன?

பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல் டீசல் விலையின் அதிரடி மாற்றம்... அருண் ஜேட்லி அறிவிப்பு- வீடியோ

    சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் பெட்ரோல், டீசல் விலை தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. கடந்த மே மாதம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் எப்போதும் போல பெட்ரோல், டீசல் விலை உயர்த்திக் கொள்ள முடியும்.

    மத்திய அரசு எவ்வளவு

    தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் 1.50 ரூபாய் குறைத்து இருக்கிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு விதிக்கும் வரியில் 1.50 ரூபாய் குறைத்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பை டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார்.

    எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பு

    எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பு

    இதேபோல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் 1 குறைத்து இருக்கிறது. மத்திய அரசின் அறிவுரையின் பெயரில் இந்த குறைப்பு நிகழ்ந்துள்ளது. மொத்தமாக 2.50 ரூபாய் குறைந்து இருக்கிறது.

    மாநில அரசுக்கு பரிந்துரை

    மாநில அரசுக்கு பரிந்துரை

    அதேபோல் மாநில அரசுக்கு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தங்கள் மாநில வரிகளை குறித்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே சில மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    விலை என்ன

    விலை என்ன

    தற்போது சென்னையில் பெட்ரோல் விலை 87.33 ரூபாயும், டீசல் விலை 79.90 ரூபாயும் உள்ளது. இதனால் தற்போது பெட்ரோல் விலை 85.10 ரூபாய்க்கும், டீசல் விலை 77.75 ரூபாய்க்கும் விற்க உள்ளது.

    English summary
    Some relief: Petrol and Diesel prices gets declined for first time. Finance Minster announced the price change.Excise duty to be reduced by Rs.1.50 & OMCs will absorb 1 rupee. So, a total of Rs.2.50 will be reduced on both diesel and petrol: Finance Minister Arun Jaitley
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X