விரும்பத்தகாத சக்திகள் மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்தியுள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை சில விரும்பத்தகாத சக்திகள் பயன்படுத்திவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை விரும்பத்தகாத சக்திகள் பயன்படுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி இல்லை எனில் ஜல்லிக்கட்டு நடந்திருக்காது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியளார்களிடம் பேசினார். அப்போது மோடி இல்லை எனில் ஜல்லிக்கட்டு நடைபெற்றிருக்காது என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது,

பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு இல்லை. ஜல்லிக்கட்டுக்காக நான் செய்த முயற்சிகள் பலன் தந்துள்ளது. மாணவர்கள் போராட்டம்தான் இதற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.
விரும்பத்தகாத சக்திகள் மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இருப்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
பீட்டாவையும், விலங்குகள் நலவாரியத்தையும் நெறிப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு புதிய முதல்வர் சரியாகத்தான் செயல்படுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications