கடையநல்லூரில் பரபரப்பு.. மைனர் பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மகன்.. விலங்கிட்டு சிறை வைத்த தந்தை
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகனை விலங்கிட்டு வீட்டு சிறையில் வைத்துள்ளார் தந்தை
கடையநல்லூர்: மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மகனின் கை, கால்களில் பெற்ற தந்தையே விலங்கிட்டு சிறை வைத்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்தவர் சுப்பையா. இவரது மகன் கருப்பசாமி, 21. இவர் அதே பகுதியை சார்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இருவரும் வீட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர் நேற்றைய தினம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் கருப்பசாமி மீது புகார் செய்தனர்.
அதன்பேரில் உடனடியாக விசாரணையை துவக்கியது காவல்துறை. அப்போது பெண்ணின் திருமண வயது பூர்த்தியாகாததும் அவருக்கு வயது 17 என்பதும் தெரியவந்ததையடுத்து இருவரையும் எச்சரிக்கை செய்து தனித் தனியே பெற்றோர்களிடம் ஒப்படைத்தது.
இதனையடுத்து, நேற்று இரவு மீண்டும் தன் காதலி வீட்டிற்கு சென்று கருப்பசாமி, காதலியை கூட்டிட்டு ஓட முயற்சித்தார். இதனை கருப்பசாமியின் தந்தை பார்த்துவிட்டார். அதனால் ஆத்திரடைந்த அவர் மகனை கண்டித்தார்.
ஆனால், கருப்பசாமியோ தந்தை கண்டித்ததால், அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் தந்தை தன் மகனின் கை கால்களில் விலங்கிட்டு வீட்டில் அடைத்து வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது. மேலும் இதுகுறித்து கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் பரிமளா விசாரணை செய்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications