தந்தையுடன் தகாத உறவு.. பெண்ணை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்.. திருப்பூரில் பயங்கரம்!
திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருப்பூர்: தந்தையின் கள்ளக்காதலியை மகன் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை அவரது மகனே வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஸ்ரீவித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் அருண் என்ற மகனும் உள்ளனர்.

தையல் தொழிலாளி
அருணுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தெரிகிறது. அருண் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

ரங்கநாயகியுடன் பழக்கம்
இந்நிலையில் தந்தை துரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ரத்தினத்தை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போதுதான் திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்ற 45 வயது பெண்ணுடன் துரைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தந்தையின் கள்ளக்காதல்
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த மகன் அருண், ரங்கநாயகியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி தந்தையை வற்புறுத்தியுள்ளார்.

காதில் வாங்கவில்லை
ஆனால் துரை அதனை கொஞ்சம் கூட காதில் போட்டுக்கொள்ளாமல் ரங்கநாயகியுடனான உறவை கைவிட மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தந்தையின் கள்ளக்காதலியான ரங்கநாயகியை சந்தித்த அருண் அவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் அவரும் சொல்வதை கேட்காமல் துரையுடனான உறவை தொடர்ந்துள்ளார்.

கத்தியுடன் வந்த அருண்
இந்நிலையில் ரங்கநாயகி நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அருண் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தப்பி ஓடிய ரங்கநாயகி
அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண், ரங்கநாயகியை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாயகி கத்தியை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ரோட்டில் ஓடினார்.

ஓடிவந்த பயணிகள்
இருப்பினும் விடாமல் துரத்திய அருண் ரங்கநாயகியின் கையில் குத்தினார். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த பயணிகள் ஓடிவந்து, அருணை பிடித்து அந்த பெண்ணை காப்பாற்றினர்.

ரங்கநாயகி மீட்பு
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ரங்கநாயகியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வைரலாகும் வீடியோ
இந்த சம்பவம் தொடர்பாக அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications