சோனியா அனுப்பிய வாழ்த்துக் கடிதம்.. உதவியாளர் வாசிக்க கேட்டறிந்த கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை: பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா காணும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை, உதவியாளர் வாசித்து காட்டினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் அவரது 94வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 5 மணிக்கு சிறப்பாக கொண்டாட திமுக ஏற்பாடு செய்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். உடல் நலக்குறைவு காரணமாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கலந்துகொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் வாழ்த்து அனுப்பியுள்ளார். அவரது வாழ்த்து கடிதத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் அவரது உதவியாளர் சண்முகநாதன் வாசித்து காட்டினார். அதனை ஆர்வத்துடன கருணாநிதி கேட்டார். அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications