அதிமுக புறக்கணிப்பு: ஜி.கே.வாசன், வேல்முருகனுக்காக வருத்தப்படும்... வைகோ !
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வால்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோருக்கு அதிமுக கூட்டணியில் இடம் அளிக்கப்படாததற்கு வருந்துவதாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த பண்ருட்டி தி. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட சில சிறிய கட்சிகளுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அதேபோல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கணிசமான தொகுதிகளை பெற்று தேர்தலை சந்திக்கலாம் என தமாகா கணக்கு போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்சிக்கும் எந்த தொகுதியும் அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் இல்லை. இதனால் தமாகாவின் நிலைமையும் பரிதாபமாகியுள்ளது.
இந்நிலையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், த.மா.கா. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து தன்னால் தனித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக கூட்டணியில் வாசன், வேல்முருகன் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படாததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய சூழலில் அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்று தெரியாது. மற்றப்படி நானாக எதையும் சொல்ல முடியாது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், நானாக எந்த கருத்தையும் தற்போது கூற முடியாது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications