வர்தாவில் வதைபட்ட வடமாவட்டங்கள்... உள்மாவட்டங்களில் 'சுள்' வெயில்
வர்தா புயலின் தாக்கத்தால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் திருவள்ளூர் அருகே பழவேற்காட்டில் கரையைக் கடக்கத் துவங்கியது.
22 ஆண்டுகளுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த புயல் சென்னையை தாக்கியுள்ளது. இந்த புயல் வட வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே, சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து வீசும் காற்றால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுகின்றன. 100 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இரவு 7 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பலத்த காற்றால் 3000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் திண்டுக்கல், மதுரை, கரூர், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் புயலின் தாக்கம் கொஞ்சம் கூட இல்லை. கடும் வெப்பமும்,சுள்ளுன்னு வெயில்தான் அடித்து வருகிறது. விவசாயப் பணிகள் நடந்துவரும் வேளையில் மழை இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிட்டு பெய்து கெடுக்கும் மழை கொஞ்சம் இந்தப் பக்கமும் பெய்யக்கூடாத? என உள்மாவட்ட மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications