சென்னை-கூடுர் இடையே பராமரிப்பு பணிகள்; ரயில்களின் நேர மாற்றத்தை அறிவித்தது தெற்கு ரயில்வே!
சென்னை: சென்னை மற்றும் கூடுர் இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் தொடங்க இருப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த நேர மாற்றங்களினால் பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் பழைய நேரத்திலேயே ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே மேலும் கூறியுள்ளது.

அதன்படி, "சூலூர் பேட்டையில் இருந்து இன்று மற்றும் வருகிற 14, 16, 17, 21, 23, 24, 28, 30 மற்றும் அக்டோபர் 1, 5 ஆகிய தேதிகளில் பகல் 12 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வ.எண்:66026), அரை மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் வருகிற 14, 16, 17, 21, 23, 24, 28, 30 மற்றும் அக்டோபர் 1, 5 ஆகிய தேதிகளில் பகல் 2.05 மணிக்கு விஜயவாடாவுக்கு இயக்கப்படும் "பினாகினி" எக்ஸ்பிரஸ் ரயில் (12712), 40 நிமிடம் தாமதமாக 2.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications