ஜூன் 19-ல் நெல்லை, எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி, எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலியிலிருந்து ஜூன் 19 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
இதுபோல, எர்ணாகுளத்திலிருந்து ஜூன் 19 ஆம் தேதி மாலை 7 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
எர்ணாகுளம் - வேளாங்கன்னி:
இதேபோல், ஜூன் 16, 23, 30-ல் எர்ணாகுளம் - வேளாங்கன்னி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எர்ணாகுளத்திலிருந்து ஜூன் 16, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கன்னி சென்றடையும்.
இதுபோல, வேளாங்கன்னியிலிருந்து ஜூன் 17, 24, ஜூலை 1 தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இந்த ரயில்கள் அலுவா, திருச்சூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications