தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை வெளுக்குமாம்.. வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு!
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி அக்னிநட்சத்திரம் தொடங்கியது. அதற்கு முன்னரே வெயில் கொளுத்தியதால் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.
அதற்கேற்றார் போலவே அக்னி நட்சத்திரத்தின் போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு
நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. பல இடங்களில் ஆறுகள் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இடியுடன் கூடிய கனமழை
இந்நிலையில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மாலத்தீவில் மேலடுக்கு சுழற்சி
தெற்கு கர்நாடகாவிலிருந்து தென் தமிழகம் வரை காற்றில் வேக மாறுபாடு நிலவும் என்றும் மாலத்தீவு பகுதியில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

அதிகமாக 35டிகிரி செல்சியஸ்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் அளவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாயனூர் ,துறையூர் பகுதிகளில் தலா 7 செ.மீ., மற்றும் பெரியகுளத்தில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications