தர்மபுரியில் வீடு வீடாகச் சென்று கணவருக்காக வாக்குச் சேகரித்த செளமியா அன்புமணி...
தர்மபுரி: தர்மபுரியில் தனது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாக செளமியா அன்புமணி வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தர்மபுரி லோக்சபா தொகுதி பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அவர் கூட்டணிக் கட்சியின் பிற வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அன்புமணிக்கு ஆதரவாக அவருடைய மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது வீடுகளில் இருந்த பெண்களிடம், நோட்டீசுகளை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதேபோல் சாலையோரங்களில் நின்றிருந்த பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார் செளமியா. இந்தப் பிரசாரத்தில் பா.ம.க. மகளிரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications