ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கோவில், தேவாலயம், மசூதிகளில் சிறப்பு வழிபாடு
கோவை: ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி வால்பாறை கோவில், மசூதி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டதால் வரும் 6ம் தேதி வரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும்.

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் ஜெயலலிதாவின் விடுதலைக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்துள்ளது. வால்பாறையில் உள்ள கோவில்களில் வியாழக்கிழமை ஜெயலலிதாவுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகள் வால்பாறை தொகுதி செயலாளர் வி. ஹமீது தலைமையில் நடைபெற்றது.
மேலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றன. இது தவிர வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
ஜெயலலிதா விடுதலையாகி வெளியே வர கட்சியினர் தவிர்த்து பொது மக்களும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications