வேம்புலி அம்மன் கோவிலில் கோகுல இந்திரா.. தமிழகம் முழுவதும் அதிமுகவினர்.. திருவிளக்கு பூஜை!
சென்னை: சென்னை அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கோயில்களில் இன்று திருவிளக்குப் பூஜை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வரும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அதிமுகவினர் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருகட்டமாக இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அதிமுகவினர் திருவிளக்குப் பூஜை நடத்தினர். காலை 6.30 மணியளவில் இந்த பூஜை நடைபெற்றது.
சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள வேம்புலியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் பெண்கள் விளக்கேற்றி சிறப்பு பூஜை செய்து திருவிளக்கு பூஜை நடத்தினர்.
இதேபோல், சென்னை ஜி.பி. சாலையில் உள்ள பெரியப்பாளையத்தம்மன் கோயிலில் ஜெ.பேரவை செயலாளர் ஜி.ரவிக்குமார் ஏற்பாட்டில் திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா தானம் நடைப்பெற்றது. இதில் அதிமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் கலந்து கொண்டு விளக்கேற்றி கோயிலுக்கு கோமாதா தானம் செய்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications