காந்தி ஜெயந்தி: ஈரோடு காந்தி கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை

Subscribe to Oneindia Tamil

Special pujas at Gandhi temple
ஈரோடு: தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று ஈரோட்டில் உள்ள காந்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப் பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம் பாளையத்தில் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு கோவில் ஒன்று உள்ளது. இவர்களது சிலைகளோடு சேர்ந்து கோவிலில் சத்தீஸ்வர், ஆஞ்சநேயர், லட்சுமி, சரசுவதி, சனீஸ்வரர், மற்றும் நவக்கிரக சன்னதிகளும் உள்ளன.

ஆண்டுதோறும், இக்கோவிலில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று காந்தி ஜெயந்தியை யொட்டி இந்த கோவிலில் அபிசேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதணை போன்றவைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், இன்று காலை பெருந்தலையூரில் உள்ள பவானி ஆற்றுக்கு பொதுமக்கள் எடுத்து வரும் தீர்த்தம் கொண்டு, காந்தி கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட இருக்கிறது.

இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவி-மாணவிகள் கலந்து கொண்டு காந்தியை வழிபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+