நெல்லை புவியியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
நெல்லை: நெல்லை அருகே மாணவர்களுக்கு புவி ஆராய்ச்சி பயிற்சி நடந்து வருகிறது. இதை ஆர்வத்துடன் அவர்கள் குறிப்பெடுத்து வருகின்றனர்.
பட்டதாரி மாணவர்களுக்கு புவி ஆராய்ச்சி துறையில் ஆர்வத்தை வளர்க்க துண்டும் பயிற்சி முகாம் கிருஷ்ணாபுரம் பூமத்திய புவி ஆராய்ச்சி மையத்தில் நடந்து வருகிறது.
இந்த முகாமை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ துவங்கி வைத்தார். புவியியல் தொழில் நுட்ப துறை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள 60 ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பூமி குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
பின் காந்தவியல் குறித்து ஆய்வு நடைபெறும் இடங்களில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் மாணவர்கள் தங்கள் கருத்துகலை பரிமாறிக் கொண்டனர்.
இதில் கிருஷ்ணபுரம் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சதிஷ்குமார், டாக்டர் குருபரன், ஓருங்கிணைப்பாளர் ஏகேசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஜூவா என்பவர் கூறுகையில், "இன்று புவியில் காந்தவியல் மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் தான் இயற்கை பேரழிவுக்கு காரணமாக உள்ளது. இதை ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு இந்த துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த பயிற்சி நடந்தது.
தமிழகத்திலும், வெளிமாநிலத்திலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காந்தவியல் துறை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விளக்கம் அளித்தோம். மாணவர்கள் ஆர்வத்துடன் இதனை கற்று கொண்டனர்" என்று தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications