சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
ரயில் சேவையை தென் மாவட்ட மக்கள் பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை பகுதி மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வரும் பிப்ரவரி மாதம் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 9.05 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06183) இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு பிப்ரவரி 7-ம் தேதி சிறப்பு கட்டண ரயில் (06184) இயக்கப்படுகிறது.
இதேபோல் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு பிப்ரவரி 14-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (00644) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications