மேற்கு தொடர்ச்சி மலையில் தீவிரவாதிகள் நடமாட்டமா? சிறப்பு கண்காணிப்பு படை அமைக்க டிஜிபி உத்தரவு
நெல்லை: தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு படையை அமைக்க டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பிரத்யோக பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் புர்துவான் மாவட்டத்தில் ஐஎஸ் தீவிரவாதி முகமது முஸ்ரூதின் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் ஆண்டிப்பாளையத்தில் மனைவி குழந்தைகளுடன் ஆறு ஆண்டுகளாக தங்கியிருந்து மளிகை வியாபாரம் பார்த்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓவ்வொரு மாவட்டத்துக்கும் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க சிறப்பு படை அமைக்க டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மூன்று மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ள மாவட்டங்களான நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் மலைப்பகுதியை தீவிரமாக கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு படைக்காக மாவட்டம் வாரியாக டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ, முதல்நிலை, இரண்டாம் நிலை காவலர்கள் என 10க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே சென்னை பயிற்சி கல்லூரி மற்றும் அந்தந்த மாவட்ட துப்பாக்கி சூடும் பயிற்சி மையத்தில் ரேஞ்சர் கமாண்டோ பயிற்சி பெறறவர்கள்.
அந்தந்த மாவட்ட எஸ்பி தலைமையில் இவர்கள் செயல்படுவார்கள். நெல்லை மாவட்டத்தில் எஸ்பி விக்ரமன் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குற்றாலம், சாமபவர் வடகரை, ராதாபுரம், புளியங்குடி, சிவகிரி ஆகிய மலைப்பகுதியில் நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications