அருளை அள்ளித்தரும் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள்...
மதுரை: அன்னை ஆதிபராசக்தி தன் மக்களை காக்க பல அவதாரங்களை எடுத்து அருளை அள்ளி வழங்கி வருகிறாள். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குண்ணத்தூர் அருகே மகாசக்தி பீடத்தில் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களை தன் அருள் பார்வையினாள் காத்து வருகிறாள்.
மக்களின் நலன் காக்கவும், கண் திருஷ்டியை போக்கவும் இங்குள்ள ஸ்ரீ பஞ்சமுக பிரத்தியாங்கிர தேவிக்கு பவுர்ணமியில் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்திவ் பங்கேற்றால் கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை

அன்னை ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடத்தில் 41 அடி உயரத்தில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. ஸ்ரீ நாகராஜர், ஸ்ரீ நாகராணி மற்றும் புற்று அம்மன் சுயம்பு பீடம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சக்தியை அறிந்து பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் செல்லும் போதே டி.குண்ணத்தூர் அருகில் கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் மகாசக்தி மாரியம்மனின் அருளை பெறலாம்.
கோவில் அத்தனை அமைதியாய் இருக்கிறது. ஆலயத்தினுள் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள், ஸ்ரீ மகா வராஹி தேவி, ஸ்ரீ பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி ஆகிய மூன்று தேவிகளும் பிரம்மாண்டமாய் எழுந்தருளி இருக்கின்றனர்.
பவுர்ணமியில் இந்த மூன்று தேவியருக்கும் விஷேச பதார்த்தங்களைப் படைத்து, அவர்களுக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை விஷேசப் பூஜைகள் நடைபெறும் என்று கூறினார் ஆலய நிர்வாகி. பவுர்ணமி தினத்தில் சாம்பலைத் தான் பிரசாதமாக வழங்குகின்றனர். அன்றைய தினம் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் பூக்குழி பெருவிழா நடைபெறுகிறது.
குடும்பத்தில் பிரச்சனை, தொழிலில் ஏதேனும் பிரச்சனை என்று வந்து இங்குள்ள அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.

பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இங்குள்ள அம்பாள் வராஹி தேவியை வணங்கினால் தீர்வு கிடைக்கிறதாம். விவசாயத்தில் பிரச்சனைகள், புது வீடு கட்டி குடியேற முடியாப் பிரச்சனைகள், என பூமி சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் அம்பாள் வராஹி தீர்த்து வைப்பார்கள்.
ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தவிர புரட்டாசி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.
மாதந்தோறும் பவுர்ணமியில் 50 கிலோ வத்தல் வைத்து யாகங்கள் நடைபெறுகிறது. குடும்ப நலத்திற்காக பிரதி வருடம் சித்திரை பவுர்ணமி அன்று அன்னைக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறும். தைப் பவுர்ணமிகளிலும் மாசி மாதங்களிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண் பெண் என இருவரும் செவ்வாடை அணிந்து இருமுடி கட்டி வந்து வணங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு தை 28ம் தேதி 10.02.17, மாசி 28ம் தேதி 12.03.17 தினங்களில் இருமுடி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கு உள்ளது எப்படி செல்வது?
திருமங்கலம் தாலுகா டி.குண்ணத்தூர் அருகே உள்ள சக்திபுரத்தில் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருமங்கலத்தில் இருந்தும் டி.கல்லுப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று இறங்கலாம்.
மேலும் விபரங்களுக்கு: சக்திபுரம், புதுப்பட்டி, திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். செல்: 99941-27038, 98653-89026
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications