'அம்மா'வை அசிங்கப்படுத்திவிட்டது இலங்கை: துக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற அதிமுக பெண்!
சேலம்: இலங்கை ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி வந்த செய்தியை பார்த்து மனம் உடைந்த சேலம் அதிமுக நிர்வாகி விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
சேலம் மாநகராட்சி 16வது வார்டு அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் விஜயலட்சுமி(52). 2 மகன்கள், ஒரு மகளுக்கு தாயான அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் இணைத்து வைத்து இலங்கை ராணுவ இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியானதை பார்த்து மனமுடைந்தார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் நேற்று முன்தினம் மாலை 10க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு படுத்துவிட்டார்.
வழக்கமாக காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் அவர் நேற்று காலை வெகுநேரமாகியும் கண் விழிக்கவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவரை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளப்பட்டி போலலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வரை இந்தியா முழுவதும் பெருமைபடுத்தி பேசுகிறார்கள். இந்த நிலையில் அவரை இலங்கை அரசு தவறாக சித்தரித்து இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையால் நான் மனமுடைந்து விட்டேன். எனது தற்கொலை முடிவிற்கு இலங்கை அரசே காரணம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications