For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது.. ஒரு டின் பால்பவுடர் ரூ2 ஆயிரமாம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

இலங்கை அகதிகளாக 5 பேர் ராமேஸ்வரம் வந்து சேர்ந்துள்ளனர்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: இலங்கையை சேர்ந்த 2 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுவரை இப்படி ஒரு துயர் இலங்கை வரலாற்றில் நடந்ததே கிடையாது.. விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது.

சஞ்சீவி மலையை அனுமன் சுமந்த மாதிரி இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்: அண்ணாமலை சஞ்சீவி மலையை அனுமன் சுமந்த மாதிரி இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்: அண்ணாமலை

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கதி கலங்கி உள்ளனர்.. அதேசமயம் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு தமிழகம் வந்துசேருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்...

தஞ்சம்

தஞ்சம்

அப்படி இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைவது தொடர்கதையாகியும் வருகிறது. இங்கு வந்திறங்கும் நபர்களை, அகதிகள் முகாமுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.. இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக, அதிகமான மக்கள் தமிழகத்திற்கு வர தயாராக இருப்பதாக அம்மக்கள் கூறுகிறார்கள்...

தமிழ்நாடு அகதி

தமிழ்நாடு அகதி

இந்நிலையில், இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.. இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது... 2 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ளனர்... வவுனியாவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.. நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து இலங்கையை விட்டு வெளியேறி வந்துள்ளார்கள்.. அவர்களை கடற்படை போலீசார் மீட்டு, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பச்சிளம் குழந்தை

பச்சிளம் குழந்தை

இலங்கையில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக, தன்னுடைய 2 மாத பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தியபடியே லதா என்பவர் கலங்கி கூறுகிறார்.. "ஒரு டின் பால் பவுடரின் விலை ரூ.2,000, குழந்தைக்குத் தேவையான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் கிடையாது.. இதே நிலை நீடித்தால், பட்டினியால் சாக வேண்டியதுதான்" என்று வருந்தி சொல்கிறார்.. நாளுக்கு நாள் இலங்கையில் நடக்கும் துயரம், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

English summary
sri lankan family including two month infant land indian coast seeking refuge இலங்கை அகதிகளாக 5 பேர் ராமேஸ்வரம் வந்து சேர்ந்துள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X