இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மேலும் 11 மீனவர்களை சிறைபிடித்தது!
புதுக்கோட்டை: இலங்கை கடற்படை மீண்டும் 11 தமிழக மீனவர்களை சிறைபிடித்துள்ளது மீனவ கிராமங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக மீனவர்கள் நாள்தோறும் கடலுக்குச் செல்வதும் இலங்கை கடற்படையால் அடித்து விரட்டப்படுவது அல்லது கைது செய்யப்படுவது என்பதும் தொடர் கதையாகி வருகிறது.

மோடி அரசு பதவியேற்றபோது நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கை மீனவர்களை தமிழக அரசும் விடுதலை செய்தது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் மீனவர்களை கைது செய்வதாகவும் விடுவிப்பதாக அறிவிப்பை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டு வருகிறது இலங்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கிறோம் என்று அறிவித்த பின்னரும் சிறையில் அடைத்து வருகிறது இலங்கை அரசு.
இந்த நிலையில் சென்னைக்கு அருகே இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து சிக்கினர். இதைத் தொடர்ந்து தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 11 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
அவர்களது 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது. தொடரும் இந்த சிறைபிடிப்புகளால் தமிழக மீனவ கிராமங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications