தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி விட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 500 மீனவர்கள் சனிக்கிழமை காலை விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர். அவர்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர்.

மேலும் சிலர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் வேறு வழியில்லாமல் கரைக்கு திரும்பினார்கள். இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு கண்டால் மட்டுமே தாங்கள் நிம்மதியாக கடலுக்கு செல்ல முடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதும், இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி, விரட்டி அடிப்பது அல்லது கைது செய்வதும் தொடர் கதையாக உள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு பல தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கச்சத்தீவை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications