50 ஆண்டுகளாக திரைத்துறையில் கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவி #Sridevi
50 ஆண்டுகளாக திரைத்துறையில் கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவி நேற்று திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: 50 ஆண்டுகளாக திரைத்துறையில் 5 மொழிகளிலும் கலக்கு கலக்கிய நடிகை ஸ்ரீதேவி மரண செய்தி கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1963-ஆம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 4 வயதில் கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
நம்நாடு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மூன்று முடிச்சு
1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார். இருவருடனும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

ஸ்ரீதேவி ரோல் மாடல்
ஸ்ரீதேவியை ரோல் மாடலாக கொண்டு எத்தனையோ நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர்.

50 ஆண்டுகளாக...
50 ஆண்டுகளாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதையடுத்து தெற்கில் பிறந்து வடக்கில் சென்று வெற்றிக் கொடி நாட்டினார். அப்போது இருந்த போட்டியில் இவரும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார்.

நடிப்பு திறமை
மூன்றாம் பிறை படத்தில் அப்பாவி பெண்ணாக தனது நடிப்பை அசத்தலாக வெளிப்படுத்தியிருப்பார். 16 வயதினிலே, பிரியா, போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.

விருதுகள்
சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் 2013-இல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications