ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளைதான் எம்பாமிங்- இறுதிச்சடங்கு தாமதமாகிறது

ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளைதான் எம்பாமிங் செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இறுதிச் சடங்குகள் நாளைதான் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துபாயில் சனிக்கிழமையன்று உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை எம்பாமிங் செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்படும். இறுதிச் சடங்குகள் நாளைதான் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் ஆல்கஹால் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. எனவே இதை சாதாரண மரணமாக பார்க்க முடியாது.

Sridevi’s body will embalmed tomorrow

சந்தேகத்திற்கிடமான சாவு என்ற பிரிவில்தான் துபாயில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி என்பவர் இந்தியாவில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் துபாய் அரசை பொறுத்தளவில் ஒரு வெளிநாட்டு பிரஜை ஸ்ரீதேவி மரண வழக்கு இப்போது துபாய் public prosecution துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விசாரணை நடத்தி ஒப்புதல் வழங்கிய பிறகே ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதனால்தான் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்திய தூதரக மட்டத்தில், கூடிய விரைவில் ஸ்ரீதேவி உடலை இந்தியா எடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு இன்று நடைபெற்றது. இதனை அடுத்து உடற்கூறாய்வு அறிக்கை அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. மேலும் முழு அளவிலான உடற்கூறு சோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. மேலோட்டமான முதல்கட்ட அறிக்கைதான் வெளியாகியுள்ளது.

அரசு வக்கீலுக்கு அறிக்கையில் திருப்தி இல்லாததால் எம்பார்மிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் நாளை எம்பார்மிங் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்பாமிங் செய்யப்பட்டு நாளை உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும். ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இதன் பின்னர் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது.

பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள், பிரபல அரசியல் தலைவர்கள் மும்பையில் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். ஸ்ரீதேவியின் உடல் திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை அவருக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. அவரது உடலை காண வேண்டும் என்பதற்காக மும்பை அந்தேரியில் உள்ள லோகன்ட்வாலா காம்ப்ளஸில் உள்ள அவரது வீடு முன்பு ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+