16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி-நினைவில் வாழும் ஸ்ரீதேவி- தலையங்கம்
திரைப்படங்களில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களான 16 வயதினிலே மயிலும் ஜானி அர்ச்சனாவும் மூன்றாம் பிறை விஜியும் அவ்வளவு விரைவாக ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.
Recommended Video

சென்னை: திரைப்படங்களில் தாம் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களிலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி 1970களின் இறுதியிலும் 1980களிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் செல்வி கதாபாத்திரம் மூலமாக நாயகியாக்கினார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 13.

இதன் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலே மயில் பாத்திரம்... இன்னமும் மயில் பாடும் 'செந்தூரப்பூவே' பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஜினி, கமல் எனும் இருபெரும் நாயகர்களுடன் அழகு மயிலாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி.
சிகப்பு ரோஜாக்கள் சாரதா, தாயில்லாமல் நான் இல்லை புவனா என நடிப்பில் விஸ்வரூபம் காட்டிய ஸ்ரீதேவி 1980-ல் வெளியான ஜானியில் அர்ச்சனா எனும் பாடகியாக முதிர்ச்சியான கதாபத்திரத்தில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டார் ஸ்ரீதேவி.
1985-ம் ஆண்டு நான் அடிமை இல்லை படத்தின் பிரியா பாத்திரத்துடன் அந்த மயில் தமிழ் சினிமாவின் பயணத்தை நிறுத்திவிட்டது. தென்னிந்திய மொழிகளிலும் இந்தி திரை உலகிலும் மயிலின் கொடி உயரவே பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக கோலோச்சினார்.

சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மீண்டும் தமிழக திரையரங்குகளில் மயில் எட்டிப்பார்த்தார். 2015-ம் ஆண்டு விஜய் நடித்த புலி திரைப்படத்தில் ராணி யுவராணி பாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.
அரை நூற்றாண்டுகாலம் இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக திகழ்ந்த நம் சிவகாசி மீனாம்பட்டி மீனா என்கிற ஸ்ரீதேவி என்கிற மயிலின் வாழ்க்கை 54 வயதிலேயே முடிவுக்கு வந்திருப்பது பெருந்துயரம். இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பு!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications