இலங்கை அவதூறு கட்டுரையால் விரக்தி: தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட வேண்டாம் என சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த அவதூறு கட்டுரை தொடர்பான செய்தியறிந்து சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.

இந்த செய்தியை அறிந்து முதல்வர் ஜெயலலிதா விஜயலட்சுமிக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது நான் குரல் கொடுத்துக்கொண்டு வருவதை கொச்சைப்படுத்தி இலங்கையின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்ட செய்தியை அறிந்து, தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு தாங்கள் முயற்சி செய்துள்ளீர்கள் என்ற செய்தி என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.
அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். இயற்கையின் பரிணாமத்தில் மனித இனம் வியப்பிற்குரியது. மனித உயிர் விலை மதிப்பற்றது. இப்படிப்பட்ட இன்றியமையாத உயிரை, எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சிவசப்பட்டு மாய்த்துக்கொள்ளும் செயலில் இனி ஈடுபட வேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பது, அதனால் ஏற்படும் துன்பங்களை சகித்துக்கொண்டு கடுமையாய் செயலாற்றுவது, அறவழியில் போராடுவது போன்றவற்றை தளராது மேற்கொள்வதன் வாயிலாக, எதையும் சாதிக்க முடியும், எதிலும் வெற்றி பெற முடியும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது.
இதே நம்பிக்கையுடன் தாங்கள் வாழ வேண்டும், வாழ்ந்து சாதிக்க வேண்டும், சாதிப்பவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.
தற்கொலை கோழைத்தனம், வாழ்ந்து சாதிப்பது புத்திசாலித்தனம் என்பதை புரிந்துகொண்டு, வாழ்ந்து காட்டுபவர்கள் மட்டுமே மனிதர்கள் என்பதற்கேற்ப, தாங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications