கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: மீனவர்கள் வேதனை
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே 500க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர்.

மூன்று ரோந்துக்கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்த படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தும் பிரச்னை செய்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை கரைக்குத் திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தும் தாக்குதல்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டால் மீன் பிடித் தொழிலைக் கைவிடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்ந்து நடந்தாலும், மத்திய மாநில அரசுகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications