ஶ்ரீபெரும்புதூர் தொகுதி: திமுக கோட்டையில் கடும் போட்டி! சம பலத்துடன் வேட்பாளர்கள்- வெல்வது யார்?
ஶ்ரீபெரும்புதூர்: லோக்சபா தேர்தல்களில் திமுக அதிக முறை வென்ற ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நட்சத்திர தொகுதியாகும். இத்தொகுதியில் திமுகவின் மூத்த தலைவர் டிஆர் பாலு 2-வது முறையாக களம் காண்கிறார். இத்தொகுதி நிலவரத்தை இப்பக்கத்தில் பார்ப்போம்.
ஶ்ரீபெரும்புதூர் (திருப்பெரும்புதூர்) லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள்: அம்பத்தூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம். 2021 சட்டசபை தேர்தலில் ஶ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளையுமே திமுகதான் கைப்பற்றியது.

ஶ்ரீபெரும்புதூர் வாக்காளர்கள்: மொத்த வாக்காளர்கள்- 23,58,526; ஆண்கள்- 11,69,344; பெண்கள் -11,88,754; 3-ம் பாலினத்தவர் 428.
திமுகவின் கோட்டை: 1967-ல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உருவானது முதல் மிக அதிகபட்சமாக திமுக 8 முறை வென்று கோட்டையாக உருவாக்கி வைத்திருக்கிறது. 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மரகதம் சந்திரசேகர் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்ற தொகுதி. இங்குதான் 1991-ல் பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதிமுகவும் இத்தொகுதியில் 3 முறை வென்றிருக்கிறது.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
டிஆர் பாலு (திமுக) 3,52,641
ஏகே மூர்த்தி (பாமக) 3,27,605
அருண் சுப்பிரமணியன் (தேமுதிக) 84,530
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ராமச்சந்திரன் (அதிமுக) 5,45,820
ஜெகத்ரட்சகன் (திமுக) 4,43,174
மாசிலாமணி (மதிமுக) 1,87,094
அருள் அன்பரசு (காங்கிரஸ்) 39,015
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
டிஆர் பாலு (திமுக) 7,93,281
வைத்திலிங்கம் (பாமக) 2,85,326
ஶ்ரீதர் (மநீம) 1,35,525
மகேந்திரன் (நாம் தமிழர்) 84,979
தாம்பரம் நாராயணன் (அமமுக) 41,497
2024-ம் ஆண்டு தேர்தலில் களம் காண்பவர்கள்
திமுக- டிஆர் பாலு
அதிமுக - பிரேம்குமார்
தமாகா- வேணுகோபால்
நாம் தமிழர் - ரவிச்சந்திரன் என மொத்தம் 31 பேர் களத்தில் உள்ளனர்.
ஶ்ரீபெரும்புதூர் தொகுதியை பற்றி: ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதி. ஆன்மீக தலங்களும் கல்வி நிறுவனங்களும் நிறைந்த தொகுதி. தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தவர் அதிகம் பணிபுரிகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையிலும் ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்து உள்ளன. இங்கும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தவரே அதிகம். பொதுவான அடிப்படை சிக்கல்கள் நிறைந்தே காணப்படுகிற தொகுதி இது. சுகாதார சீர்கேடு, குடிநீர், சாலை வசதி ஆகியவற்றை எதிர்பார்த்திருக்கின்றனர். சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை இத்தொகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கின்றனர். வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் திட்டங்களே மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.
ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஜாதிய அடிப்படையில் வன்னியர்கள், தலித்துகள், நாயுடுகள், ரெட்டிகள், முதலியார்கள் அதிகம் உள்ள தொகுதி. இங்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர்.
ஶ்ரீபெரும்புதூர் களநிலவரம்: திமுகவின் மூத்த தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டிஆர் பாலு மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை இத்தொகுதியில் சுமார் 1.35 லட்சம் வாக்குகளை பெற்ற மநீம இம்முறை திமுக அணியில் இணைந்து நிற்கிறது. இது திமுக வேட்பாளர் டிஆர் பாலுவுக்கு கூடுதல் பலம். கடந்த முறை பாமக, அமமுக தனித்து இத்தொகுதியில் களம் கண்ட நிலையில் இம்முறை ஒரே கூட்டணியாக தமாகா வேட்பாளரை ஆதரிக்கின்றன. பாமக கடந்த முறை சுமார் 2.85 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது தமாகா வேட்பாளருக்கு பலம். திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் அக்கட்சியின் சீனியருமான டிஆர் பாலு போட்டியிடுவதால் இத்தொகுதியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications