ஸ்ரீரங்கம்: இலை, சூரியன், தாமரையை விடுங்க.. 'தட்டுவைக்கும் தாங்கி' யாரோட சின்னம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விதம் விதமான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது குறித்த சுவாரஸ்யமான தொகுப்பு இது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

Srirangam : Allotted symbols for candidate

இந்தத் தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

மிகவும் பிரபலமான கட்சிகளின் சின்னங்கள் அனைவரும் அறிந்தது தான். இத்தேர்தலில் போட்டியிடும் மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் சின்னங்கள் பற்றிய பார்வை :-

1. அண்ணாத்துரை- மார்க்சிஸ்ட் கம்யூ.,- கதிர் அரிவாள்
2. என். ஆனந்த்- தி.மு.க., - உதயசூரியன்
3. சுப்பிரமணியம்- பா.ஜ.,- தாமரை
4. எஸ்.வளர்மதி- அ.தி.மு.க.,- இரட்டை இலை
5. வி.பாண்டியன்- எழுச்சி தமிழர் பாசறை- ஊதல்(விசில்)
6. ஜேம்ஸ் பால்- அகில இந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி- லெட்டர் பாக்ஸ்
7. ஹேமநாதன்- ஐக்கிய ஜனதா தளம் -அம்பு

சுயேட்சை வேட்பாளர்கள்:

8. சி. அண்ணாமலை- காஸ் அடுப்பு
9. பி. ஆறுமுகம்- ஆட்டோ ரிக்ஷா
10. எம்.எஸ். ஆறுமுகம்- புட்டி (பாட்டில்)
11. இ.ஆனந்தன்- மெழுகுவர்த்தி
12. டி.ஆனந்த்- தட்டு வைக்கும் தாங்கி (பிளேட் ஸ்டாண்ட்)
13. பி.ரவி- கத்திரிக்கோல்(சிஸர்)
14. டிராஃபிக் ராமசாமி- ஏழு கதிர்களுடன் கூடிய பேனா
15. உமர் அலி- காஸ் சிலிண்டர்
16. கதிரோசன்- தேங்காய்
17. கார்த்திக்- சதுரங்க பலகை (செஸ் போர்டு)
18. சண்முகம்- வாளி
19. சந்திரமோகன்- தொலைக்காட்சி பெட்டி (டிவி)
20. சேட்டு- பலூன்
21. திருநாவுக்கரசு- மின்கம்பம்
22. பத்மராஜன்- மோதிரம்
23.எஸ். பாண்டியன்- பிரஷர் குக்கர்
24.பால்ராஜ்- பானை
25. மன்மதன்- மட்டை பந்து வீரர் (கிரிக்கெட் வீரர்)
26. எஸ். வளர்மதி- கேக்
27. டி.வளர்மதி- கோட்
28. விஸ்வநாதன்- காலணி
29. ஸ்ரீராமச்சந்திரன்- திராட்சை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+