'சாந்தி விமோசன' இடைவேளையுடன் நடத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்
3 வேளை சாந்தி விமோசனம் என கூறி ஓய்வெடுத்துவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நடத்திய உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது.
Recommended Video

ராஜபாளையம்: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் 2-வது முறையாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. ஜீயர் உண்ணாவிரதத்தை நடத்திய போது சாந்தி விமோசனம் என கூறி 3 வேளையும் அரை மணிநேரம் ஓய்வு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள் இறைவனுக்காக வாழ்ந்த தேவதாசி என ஆய்வாளர்கள் குறிப்பிடுவதாக கவிஞர் வைரமுத்து கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆண்டாளை கவிஞர் வைரமுத்து இழிவுபடுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒரு சமூகம் போராட்டத்தில் குதித்தது. இது தொடர்பாக வைரமுத்து விளக்கம் அளித்த பின்னரும் தொடர்ந்து போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன.

திடீர் வாபஸ்
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் திடீரென அந்த போராட்டத்தைக் கைவிட்டார் ஜீயர்.

சோடா பாட்டில் பேச்சு
இதையடுத்து வைரமுத்துவுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் ஜீயரும் கலந்து கொண்டார். அப்போதுதான் சோடா பாட்டில் வீச தெரியும் என ஜீயர் பேசி சர்ச்சையானது. இதையடுத்து தம்முடைய பேச்சுக்காக ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றார் ஜீயர்.

ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்
இந்நிலையில் நேற்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஜீயர். அடங்கிப் போயிருந்த ஆண்டாள் விவகாரத்தில் ஜீயரை உசுப்பிவிடுவதன் பின்னணியில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள் பிரமுகர் ஒருவர்தான் இருப்பதாகவும் கூறப்பட்டது.

உண்ணாவிரதம் வாபஸ்
இந்த உண்ணாவிரதத்தையும் இன்று பிற்பகல் ஜீயர் முடித்துக் கொண்டார். உண்ணாவிரதம் இருந்த போது ஜீயர் 3 வேளைகளிலும் 'சாந்தி விமோசனம்' என கூறிவிட்டு அரை மணிநேரம் ஓய்வெடுத்தாராம். அரை மணிநேர ஓய்வுக்குப் பின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்திருக்கிறார் ஜீயர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications