எஸ்.ஐ பூங்கொடியுடன் கள்ளத் தொடர்பு… பில்லியம்மாளை எரித்துக்கொன்ற குணசுந்தரி
மதுரை: கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை, மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய சப் இன்ஸ்பெக்டரின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் பில்லியம்மாள் என்பதாகும். இவர் உசிலம்பட்டி அருகே உள்ள உ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன் செல்வம் மரணமடைந்துவிட்டார். இதனையடுத்து பில்லியம்மாள் ஆடுகளை மேய்த்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.

உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பூங்கொடிக்கும் பில்லியம்மாளுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பூங்கொடியின் மனைவி குணசுந்தரிக்கு தெரியவரவே அவர் சண்டை போட்டுள்ளார். ஆனாலும் இருவரின் உறவு நீடிக்கவே, ஆத்திரமடைந்த குணசுந்தரியும், அவரது உறவினர் ஒருவரும் வெள்ளிக்கிழமை இரவு உ.வாடிப்பட்டிக்கு சென்று பில்லியம்மாளிடம் தகராறு செய்துள்ளனர்.
தனது கணவர் உடனான தொடர்பை விடுமாறு குணசுந்தரி எச்சரித்துள்ளார். பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென்று தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை பில்லியம்மாள் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார் குணசுந்தரி. இதில், உடல் முழுவதும் தீப்பிடித்து பில்லியம்மாள் அலறி துடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தவர்கள் பில்லியம்மாளை மீட்டு பலத்த தீக்காயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பில்லியம்மாள் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து பில்லியம்மாளின் உறவினர் ராமன் அளித்த புகாரின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடத்திய போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி, அவரது மனைவி குணசுந்தரி உள்பட ஐவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications