நான், நான்... மகிழ்ச்சியில் பேச முடியாமல் நா தழுதழுத்த ஸ்டேட் ஃபர்ஸ்ட் பிரேமசுதா
நாமக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவது இடம்பிடித்த மாணவி பிரேமசுதாவால் மகிழ்ச்சியில் பேச முடியாமல் கண்கலங்கிவிட்டார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமசுதா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே பிரபல செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்று பிரேமசுதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டது. ஆனால் மகிழ்ச்சியில் இருந்த அவரால் பேச முடியவில்லை. நான், நான் என்றவருக்கு வார்த்தைக்கு பதில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்ததால் பேட்டி அத்துடன் முடிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேமசுதாவின் தந்தை கூறுகையில்,
நான் விவசாயம் செய்து வருகிறேன். என் மகளை நினைத்து ரொம்ப பெருமையாக உள்ளது. நான் அவரது பள்ளிக்கு செல்லும்போது எல்லாம் ஆசிரியர்கள் என்னை அழைத்து உங்கள் மகள் நன்றாக படிக்கிறாள் என்று கூறுவார்கள்.
என் மகளை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications