லோக்சபா தேர்தலில் சமூக சமத்துவப் படை போட்டி: தேமுதிகவிற்கு ஆதரவு – சிவகாமி ஐ.ஏ.எஸ்

Subscribe to Oneindia Tamil

SSP founder Sivakami IAS support for DMDK
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக எந்த அணியில் சேரப்போகிறது என்று இன்னமும் முடிவாகவில்லை. ஆனால் தேமுதிகவிற்கு ஆதரவு தரப் போவதாகக் கூறியுள்ளார் சமூக சமத்துவப்படை கட்சியின் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்.

பெரம்பலூரை சேர்ந்தவர் அதிகாரி சிவகாமி. பல்வேறு பணிகளை வகித்துள்ள அவர், தற்போது தமிழக அரசின் அச்சு மற்றும் எழுதுகோல் துறையின் ஆணையாளராக பணியாற்றி வந்தார். பணியில் இருந்து கொண்டே தலித் பெண்களின் மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்த நிலையில் முழு அளவில் அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். கடந்த 2008ம் ஆண்டு உத்தரபிரதேசம் சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார். இதையடுத்து சமீபத்தில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து முறைப்படி பகுஜன் சமாஜ் கட்சியில் அவர் இணைந்தார்.

சில ஆண்டுகளில் அக்கட்சியில் இருந்து விலகிய சிவகாமி ஐ.ஏ.எஸ். சமூக சமத்துவப் படை என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியோடு, சமூக சமத்துவப் படை, தமிழ்நாடு வாணிய செட்டியார் பேரவை, இந்திய தேசிய லீக், கிறிஸ்தவ முன்னேற்றப் பேரவை, வ.உ.சி., பேரவை, தேவநாதன் தலைமையிலான யாதவ மகா சபை, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து, "ஐ.ஜே.கே., ஜனநாயக முன்னணி' என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் 7 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினர்.

லோக்சபா தேர்தலில்

வரவிருக்கும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தேமுதிக ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளார் சிவகாமி ஐ.ஏ.எஸ்., சமீபத்தில் விஜயகாந்த்தைச் சந்தித்து, தே.மு.தி.க-வுக்கு ஆதரவு தெரிவித்​துள்ளார்.

1 சீட் ஒதுக்கணும்

செய்தியாளர்களிடம் பேசிய சிவகாமி ஐ.ஏ.எஸ், 'கூட்டணி வைப்பது தொடர்பாக விஜயகாந்தை சந்தித்தோம். அவர் இடம்பெறும் கூட்டணியில் எங்கள் கட்சி இருக்கும். எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடவில்லை. எந்தக் கூட்டணிக்குப் போனாலும் ஒரு சீட் எங்களுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று மட்டும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறதோ தெரியவில்லை. ஒருவேளை பாஜக உடன் இணைந்தால் ஒரு சீட் சமூக சமத்துவப் படைக்கு ஒதுக்குவாரா என்பது போகப் போகத் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+