ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெ. தான்.. மாதிரி சட்டசபையில் ஸ்டாலின் சரமாரி தாக்கு
ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா தான் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா தான் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி சட்டசபையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவு எம்எல்ஏ. கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சுட்டுக்கொல்லும் அரசு
இந்த போட்டி சட்டசபையில் பேசிய ஸ்டாலின் தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். அவர், பேசியதாவது, சொந்த மக்களையே சுட்டுக் கொல்லும் அரசாக தமிழக அரசு உள்ளது.

தடையில்லா சான்றிதழ்
ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா தான். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது அதிமுக அரசு தான்.

கலவரமாக்கியது
ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என சான்றிதழ் கொடுத்ததும் அதிமுகதான். அமைதி பேரணியையை கலவரமாக்கியது தமிழக அரசு. திமுகவுக்கு ஜனநாயக போராட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

13 உயிர்கள் பறிபோக
துப்பாக்கிச்சூடுக்கு அனுமதி கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். 13 உயிர்கள் பறிபோக காரணமானவரும் எடப்பாடி பழனிச்சாமிதான்.

கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்
திமுக மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசின் நோக்கம் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான். இவ்வாறு ஸ்டாலின் மாதிரி சட்டசபையில் பேசினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications