வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை: வெள்ள நிவாரணப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி மக்களை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது கொளத்தூர் தொகுதியில் 5 இடங்களில் மழை வெள்ள நிவாரண மருத்துவ முகாம்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொன்வேல்புரம், சந்திர சேகர கல்யாண மண்டபம், பேப்பர் மில்ஸ் ரோடு, திரு.வி.க நகர் ஆண்டாள் அவன்யூ, ஆகிய பகுதிகளில் ஸ்டாலின், மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், கன மழையால் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை மாநகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பாதிப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். வெள்ள நிவாரணப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது என்று கேள்வி எழுப்பினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications