விளம்பரத்துக்காக நடைப் பயணமா? ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி திணறடித்த மாணவி
மதுரை : நடைபயணத்தை விளம்பரத்திற்காக செய்கிறீர்களா என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி மாணவி ஒருவர் திணறடித்தார்.
நமக்கு நாமே - மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை ஸ்டாலின், கடந்த 20 ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் தொடங்கினார். பல்வேறு ஊர்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் மதுரை மாவட்டத்திற்கு வந்தார்.

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டார். நடைப்பயணத்தின்போது, பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவ, மாணவியருடன் உரையாடினார். அப்போது, ஒரு மாணவி, இந்த நடைப்பயணம் விளம்பரத்துக்காக செய்கிறீர்களா?, இல்லை ஆட்சிக்கு வந்தாலும் நடை பயணம் தொடருமா? என்று ஸ்டாலினிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நீங்கள் இந்த பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த மாணவியிடமே திருப்பிக் கேட்க, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அந்த மாணவி கூறினார். அந்த நம்பிக்கையோடு இருங்கள் என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் பேசிய பெண்கள், மகளிர் குழுவினருக்கு கடன் கிடைக்கவில்லை. முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ரேஷன் பொருள்கள் சரிவர விநியோகம் செய்வதில்லை என்று புகார் தெரிவித்தனர்.
மதுபானக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என பெண்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துவது, கல்விக் கடன், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை ரத்து செய்வது ஆகிய கோரிக்கைகளையும் அவர்கள் ஸ்டாலின் முன்வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications