நானும் சொல்கிறேன்.. பாசிச பாஜக ஆட்சி ஒழிக.. மு.க.ஸ்டாலின், சீமான் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக ஆட்சி ஒழிக என்று கூறியதற்காக மாணவி சோபியாவைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்த சோபியா என்ற மாணவி, பாஜக தலைவர் தமிழிசையின் இருக்கைக்குப் பின்னால் இருந்தபடி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பறக்கும் விமானத்திலேயே சோபியாவுடன் சண்டையில் குதித்தார் தமிழிசை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Stalin condemns Sophias arrest

விமானத்தை விட்டு இறங்கியும் கூட தமிழிசை ஓயவில்லை. சோபியாவுடன் கடும் வாக்குவாதம் புரிந்தார். பின்னர் போலீஸிலும் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் சோபியாவைக் கைது செய்தனர். கைது செய்த அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

மாணவி சோபியாவை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சோபியாவை போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் தற்போது திடீரென மாணவி சோபியாவை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல் நிலைக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சோபியா விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சி5த் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவீட்டில், ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!. அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்! "பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!" என்று அதிரடியாக கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

சீமான் கண்டனம்:

இதேபோல நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாணவி சோபியா கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரும் நானும் சொல்றேன், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கூறி டேக் போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+