அவதூறு வழக்கு: ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் மதுரை ஹைகோர்ட்டில் மனு
மதுரை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கடந்த 2013 ஜூன் 6 ல் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதில் அ.தி.மு.க., அரசின் நிலைப்பாடு, அரசின் நலத்திட்டங்கள் குறித்து விமர்சித்து, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக ஸ்டாலின் பேசியதாகக் கூறி, திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

ஸ்டாலின்,'எதிர்க்கட்சிகளின் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் வகையில், தமிழக அரசு உள்நோக்குடன் என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. தற்போது சட்டசபை கூட்டம் நடப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதனால் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.விமலா முன், மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி, "இம்மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்," என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் கந்தசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, "இம்மனுவிற்கு பிரதான எண் இடப்பட்டு, இன்று (ஆக.,5) விசாரணைக்கு பட்டியலிடப்படும்," என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications