சசிகலாவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு… மு.க. ஸ்டாலின் மீண்டும் கேள்வி
எந்தப் பதவியிலும் இல்லாத சசிகலாவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று மு.க. ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கட்சியிலும், ஆட்சியிலும் எந்தப் பதவியிலும் இல்லாதவர். அவருக்கு ஏன் கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த வீட்டில் அவரது தோழி சசிகலா வசித்து வருகிறார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வரை அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய அனைத்துப் பாதுகாப்புகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில், போயஸ் கார்டனில் அரசியல் ரீதியிலான அதிகாரம் படைத்த எவரும் இல்லாத தற்போதைய நிலையில், இவ்வளவு போலீசாரும், உயரதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருப்பது ஏன் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு சென்ற மு.க. ஸ்டாலின் மீண்டும் அதே கேள்வியை எழுப்பியுள்ளார். சட்டப்பேரவை செயலாளரை நேரில் சந்தித்த மு.க. ஸ்டாலின் பணி நீக்கம் செய்யப்பட்ட தமது உதவியாளரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது, தமிழகம் போதிய மழையின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications