'வைரம்' இல்லாத வைரவிழா: கருணாநிதியிடம் அழைப்பிதழை அளித்தார் ஸ்டாலின்!
சட்டப்பேரவையில் அடியெடுத்துவைத்து 60 ஆண்டு நிறைவடையும் வைரவிழா அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதியிடம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை : சென்னையில் ஜுன் 3ம் தேதி நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கான வைரவிழா கொண்டாட்ட அழைப்பிதழை அவரிடம் இன்று ஸ்டாலின் நேரில் அளித்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக சட்டமன்றத்திற்குள் எம்எல்ஏ-வாக அடியெடுத்து வைத்து, 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை வைரவிழாவாகக் கொண்டாட முடிவுசெய்து, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க-வினர் உற்சாகமாக வேலைசெய்து வருகின்றனர்.

அடுத்த மாதம் 3ம் தேதி கருணாநிதி தனது 94வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு வைரவிழா கொண்டாட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சட்டமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாணட விழா அரங்கில் உடல்நலக் குறைவு காரணமாக வைர விழா நாயகன் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்று ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிழ்ச்சியில் பங்கேற்க பாஜக அல்லாத தேசிய கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ராகுல்காந்தி, லாலு பிரசாத் யாதவ், டி.ராஜா, நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநில முதல்வர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
'மருத்துவர்கள் அனுமதித்தால், கருணாநிதி விழாவில் பங்கேற்பார்' என மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில் சென்னை கோபாலபுரம் வீட்டில் உள்ள கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் சந்தித்தனர். வைரவிழாவுக்கான அழைப்பிதழை அப்போது அவர்கள் கருணாநிதியிடம் அளித்துள்ளனர். அதன் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications